Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மே 29 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கதிரவன், எஸ்.சசிக்குமார், ஹஸ்பர் ஏ ஹலீம், கீத்
பகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் முஹமட் சாட் கட்டாக், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை, கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (28) மாலை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் இறுதியில், தமது விஜயம் தொடர்பாக உயர்ஸ்தானிகர், செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் இலங்கையைத் தாக்குவதற்கு முன்னர், தாம் இலங்கைக்கு வந்ததாகவும் பின்னர் தமக்கு பாகிஸ்தானுக்குத் திரும்பச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்த உயர்ஸ்தானிகர், தாம் இலங்கையில் இருந்த காலப்பகுதியில் தனது கதையை ஒரு புத்தகமாக எழுத ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், இரு நாடுகளுக்கு இடையில் நீண்டகாலமாக நல்லதொரு புரிந்துணர்வு இருந்துவரும் இந்நிலையில், கிழக்கு மாகாணத்துக்கான தனது விஜயத்தின் ஊடாக, மாகாணத்திலுள்ள அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் தாம் உதவுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் வர்த்தக நடவடிக்கைகளை கட்டியெழுப்புவது தொடர்பாகவும், கல்வித் திட்டங்கள் சம்பந்தமாகவும், கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவது தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago