Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 22 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிழக்கு மாகாண பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பரீட்சாத்திகள் விசனம் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாண ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆங்கில உயர் தேசிய டிப்ளோமாதாரிகளை சேர்த்துக்கொள்ளும் நோக்கில், கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இப்போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டது.
அதில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய 03 மாவட்டங்களில் இருந்து சுமார் 600க்கும் மேட்பட்ட பரீட்சாத்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
இதில் இடம்பெற்ற நுண்ணறிவு பரீட்சை வினாத்தாள் பரீட்சைக்கு முன்னர் வெளியாகி இருக்கலாம் என பரீட்சாத்திகள் சந்தேகிக்கின்றனர்.
ஏனெனில், நுண்ணறிவு வினாத்தாளில் காணப்பட்ட 20க்கும் மேற்பட்ட வினாக்கள் பிரபல போட்டிப் பரீட்சை வளவாளரால் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றிலிருந்து எவ்வித மாற்றமும் இன்றி பிரதியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதனை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாதெனவும் எமக்கான தீர்வு வேண்டும் எனவும் பரீட்சாத்திகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரளவை, அவரது கந்தளாயில் உள்ள அலுவலகத்தில் நேற்று (21) சந்தித்து மகஜர் கொடுக்க முற்பட்டனர்.
எனினும், பாராளுமன்ற உறுப்பினர், கொழும்புக்குச் சென்றுள்ளதால், அவரது பிரத்தியேக செயலாளர் கே.எம்.வாலுகவிடம் மகஜரைக் கையளித்தனர்.
இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் கிழக்கு மாணா ஆளுநர், கிழக்கு மாகாண பொதுச் சேவை செயலாளர் ஆகியோருக்கு அறிவித்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என பரீட்சார்த்திகள் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
7 hours ago