Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூன் 30 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
முஸ்லிம் சமூகத்தை, பயங்கரவாதச் சமூகமாக இந்த அரசாங்கம் சித்தரித்து வருகின்றதென, ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.
தோப்பூர் - செல்வநகர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர், முஸ்லிம் சமூகம் பல இன்னல்களுக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றதென்றும் கடந்த வாரம், தன்னையும் தனது கட்சித் தலைமைகளையும், ஐனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைத்து விசாரித்தனர் என்றும் தெரிவித்தார்.
“12 வருடங்களாக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து சமூகத்துக்கு என்னாலான சேவைகளைச் செய்திருக்கிறேன். அத்தோடு, மாவட்டத்தின் முக்கிய தேவைகளை இனங்கண்டு, அவற்றை நிவர்த்தி செய்து வருகிறேன். இன்று இந்த அரசாங்கம், முஸ்லிம் மக்களை ஒடுக்கி, அடக்கப் பார்க்கிறது.
“நாங்கள், தனி நாடோ அல்லது தனி இராச்சியங்களையோ கேட்கவில்லை. முஸ்லிம் சமூகம், ஆரம்ப காலம் தொட்டு, படையினருக்கும் நாட்டுக்கும் தேவையான உதவிகளைத் தான் செய்துள்ளது. இனிமேலும் செய்யும். நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளுக்கு ஏற்ப, சிறுபான்மை வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும். நாம் நமது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்” என, அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago