2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் விழிப்புணர்வு

Freelancer   / 2023 ஏப்ரல் 27 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

ஏ.எச்.ஆர்.சி நிறுவனத்தின் ஏற்பாட்டில், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கு, சிங்கள மொழி ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களுக்கு திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் இன்று (27) நடைபெற்றது.

இந்நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ மற்றும் சட்டத்தரணி சுரேன் பெரேரா ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டிருந்தனர். 

இந்தக் கருத்தரங்கின் முக்கியத்துவம் மற்றும் அவசியம் தொடர்பாக ஏ.எச்.ஆர்.சி நிறுவனத்தின் இணைப்பாளர் க.லவகுசராசா விளக்கமளித்ததுடன், வளவாளர்களான ருக்கி பெர்னாண்டோ மற்றும் சட்டத்தரணி சுரேன் பெரேரா ஆகியோர் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலான விளக்கத்தையும் வழங்கினர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X