Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 18 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன், அப்துல்சலாம் யாசீம்
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்ணாகச்சென்று, அந்நியநாட்டுச் செலாவணியை நாட்டுக்குப் பெற்றுத்தரும் பணிப்பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டுமென மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவித்தார்.
மூதூர் பிரதேச சபை அமர்வு இன்று (18) நடைபெற்றபோது, தனிநபர் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'குடும்ப வறுமையின் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் பெண்கள், வீட்டு உரிமையாளர்களினால் சம்பளம் வழங்கப்படாமலும், உடல், உள ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் வருகின்றார்கள்.
'வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் தொடர்ந்தும் இவ்வாறான சொல்ல முடியாத துயரங்களை எதிர்கொண்டு வருவதானது வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மீதும், அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகின்றது.
'நாட்டுக்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொள்ளும் முகமாக வெளிநாட்டில் வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வேலைவாய்ப்புப் பணியகம், வேலைக்குச் செல்லும் நபர்களுடைய நலன்கள் தொடர்பில் கண்காணிக்கும் முகமாக அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிவர வேண்டியது அவசியம்.
'குறைந்தது மாதத்துக்கு ஒரு முறையாவது அவர்களுடைய நலன்கள் தொடர்பில் அறிந்துகொள்ளும் பொறிமுறையை உருவாக்க வேண்டும். இவ்வாறான நாடுகள் மனித உரிமைகள் செயற்பாட்டில் பின்தங்கிய நிலையில் இருப்பதால் நாட்டுப் பிரஜைகளினுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு அரசாங்கத்துக்குகு இருக்கின்றது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
7 hours ago