Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை
Freelancer / 2022 ஜூன் 15 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுற்றுலா பிரயாணம் மேற்கொண்ட ஒருவர் இன்று (15) சிறிய ரக பட்டா லொறியொன்று மோதியதில், அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த ஐ.கான்ஸ்க் சேனாரத்தின, 19 வயதுடைய ஒருவரே அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும், பொலன்னறுவையிலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலா சென்ற பஸ் கந்தளாய் குளத்தினை அண்டிய பகுதியில் நிறுத்தி பார்வையிட்டு கொண்டிருந்த போது, அதில் ஒருவர் பிரதான வீதியை கடக்க முற்பட்ட வேளையில், வேகமாக வந்த சிறிய ரக பட்டா வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பட்டா வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago