2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

நீர் விநியோக பிரச்சினை; மகஜர் கையளிப்பு

Editorial   / 2020 ஜூன் 02 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

குச்சவெளி, வடலிக்குள கிராமத்தில் பொருத்தப்பட்டிருந்த நீர்ப் பம்பி  பழுதடைந்துள்ளதால், அப்பகுதிக்கான குழாய் நீர் விநியோகம் நீண்ட நாள்களாக தடைப்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, குச்சவெளியில் செயற்பட்டு வரும் வை.எம்.எம். ஏ கிளையின் தலைவர் என்.ரபாய்தீன், செயலாளர் எம்.எம்.யாசீர் அரபாத் ஆகியோர், குச்சவெளி தவிசாளர் ஏ.முபாரக்கிடம் இன்று (02) மகஜர் கையளித்தனர்.

இவ்விடயத்தை கவனத்தில்கொண்டு, மக்களின் நலன்கருதி, பிரதேச சபையின்  உப தவிசாளர்  ஏ.எஸ்.எம்.சாஜித் அவர்களுடன்  கலந்துரையாடி,  விரைவில் வடலிக்குள  கிராமத்துக்கான நீர் விநியோகத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக, தவிசாளர்  இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X