2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

நீரில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

Mithuna   / 2023 டிசெம்பர் 03 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பத்தாம் கொலனி பகுதியில் நான்கரை வயதுடைய முகம்மது ரியாஸ் அமல் ஹாஜிரா என்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (01)  பதிவாகியுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, 

குறித்த சிறுமி  வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டு முன்னாள் உள்ள  வாய்க்காலில் தவறி விழுந்துள்ளதாகவும் அவரை சிகிச்சைக்காக கந்தளாய் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார்  தெரிவிக்கின்றனர்

மூச்சுத் திணறியதால் இந்த மரணம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X