2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

நீரில் மூழ்கி ஒருவர் மரணம்

Editorial   / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ்

திருகோணமலை - ஆலங்கேணியை வசிப்பிடமாகக் கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான 69 வயது தர்மலிங்கம் எனும் நபர், கிண்ணியா, சேலைவெட்டுவான் கங்கையில் சடலமாக மிதந்த நிலையில், பிரதேசவாதிகளால் இன்று (19) காலை மீட்கப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

சேலைவெட்டுவான் கங்கைப் பிரதேசத்துக்கு ஆடு மேய்க்கச் சென்ற குறித்த நபர்,  வீட்டுக்குத் திரும்புவதற்காக தேனி எடுக்கும் பொருட்டு, கங்கையில் இறங்கிய போது நீரில் மூழ்கி  உயிரிழந்திருக்கலாமென, சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் ​மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .