Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 18 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன், தீஷான் அஹமட், எஸ்.எம் றனீஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்
நாடளாவிய ரீதியில்எதிர்வரும் 03 வருடங்களுக்குள் 60 ஏக்கர் பரப்பில் கண்டல் தாவரங்களை நட உத்தேசித்துள்ளதாக, சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி சட்டத்தரணி தர்சினி லஹந்தபுர தெரிவித்தார்.
இதன் ஆரம்பகட்டமாக, திருகோணமலை மாவட்டத்தின் கப்பல்துறை பிரதேசத்தில் 350க்கு மேற்பட்ட கண்டல் தாவரங்கள் நாட்டிவைக்கும் நிகழ்வு, அவரது தலைமையில் நேற்று (17) நடைபெற்றது.
கண்டல் தாவரங்கள் சுற்றாடலுக்கு அதிகம் நன்மை அளிப்பதாகவும் கண்டல் தாவரங்களின் அழிவைத் தடுத்து, அவற்றை பாதுகாப்பதன் மூலம் பொருளாதார ரீதியாக பல பலன்கள் கிடைக்கும் என்றும் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.
மேலும், இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சமன் தர்சன பாண்டிகோரள, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஏ.அனஸ், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ், சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் வட, கிழக்கு மாகாண உதவி முகாமையாளர் டி.ஸ்ரீபதி, பிரதேச மீன்பிடி சங்க அங்கத்தவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
24 minute ago
36 minute ago
44 minute ago