Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
தீஷான் அஹமட் / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, தோப்பூர் உப பிரதேச செயலகத்தை தனிப் பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தக் கோரி, தோப்பூரிலுள்ள புத்திஜீவிகள் குழு, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜானக்க பண்டார தென்னக்கோனை, நேற்று (11) கொழும்பில் சந்தித்து, தமது கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இந்தச் சந்திப்பில், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, தேசிய காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் டொக்டர் ஷியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, தோப்பூர் உப பிரதேச செயலகம் 13 வருட காலமாக தரமுயர்த்தப்படாத விடயத்தையும், ஏன் தனிப் பிரதேச செயலகக் கோரிக்கையை தோப்பூர் மக்கள் முன்வைக்கின்றார்கள் உள்ளிட்ட பல நியாயங்களை, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் குறித்த குழுவினர் தெளிபடுத்தினர்..
இதனைக் கவனத்தில் கொண்டு, நல்லதொரு முடிவைப் பெற்றுத்தருவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் முயற்சியால், தோப்பூருக்கு 2006ஆம் ஆண்டு, உப பிரதேச செயலகம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago