2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

தோப்பூரில் மிதிவெடி மீட்பு

Editorial   / 2021 டிசெம்பர் 21 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை - தோப்பூர் பிரதான வீதியின் ஓரத்திலிருந்து வெடிக்காத நிலையில் காணப்பட்ட மிதிவெடி ஒன்று, இன்று (21) மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

தோப்பூர் பிரதான வீதியின் புனரமைப்பு வேலைகள் இடம்பெற்று வரும் நிலையில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த இவ் மிதிவெடி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிரதான வீதியின் தோப்பூர் உப பிரதேச செயலகத்துக்கு முன்னால் இந்த மிதிவெடி கிடப்பதைக் கண்ட பிரதேச செயலக உத்தியோகத்தர், இது தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வருகைதந்து பார்வையிட்டதுடன், மூதூர் நீதவான் நீதிமன்றின் அனுமதியைப் பெற்று மிதிவெடியை மீட்கவுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இடமானது யுத்த காலத்தில் பொலிஸ் காவலரண் இருந்த இடமென்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .