Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூன் 23 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், கீத்
நாட்டில் சுற்றுச்சூழலையும் மதிப்புமிக்க தொல்பொருள் இடங்களையும் அழிக்கும் எண்ணம் மக்களுக்கு இருக்கக் கூடாதென, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் அழகிய சூழலை பல ஆண்டுகளாக எத்தனை பேர் அழித்தார்கள் என்பது அதிர்ச்சியாக இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.
இது குறித்த கண்காணிப்பு விஜயமொன்றை, ரங்கிரி உல்பதா ரஜமஹா விஹாரைக்கு நேற்று (22) ஆளுநர் மேற்கொண்டார்.
தொல்பொருள் மதிப்புள்ள ரங்கிரி உல்பதா ரஜ மகா விஹாரை, சுமார் 2,300 ஆண்டுகள் பழமையானதாக இருப்பதாக, அவ்விஹாரையில் மஹாநாயக தேரர் கூறினார்.
துரதிர்ஷ்டவசமாக, தொல்பொருள் துறை அதன் மீதான ஆர்வத்தை இழந்துவிட்டதாகத் தெரிவித்த தேரர், அதன் தொல்பொருள் மதிப்பை பொதுமக்களை நம்பவைக்க திணைக்களம் செயல்பட்டால், உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரலாம் என்றார்.
இதனையடுத்து, ரங்கிரி உல்பதா ரஜமஹா விஹாரையை பாதுகாக்கவும், அவ்விஹாரையில் புதிதாகக் கட்டப்பட்ட தம்ம மண்டபம், குச்சவெலி பிச்சமல் விஹாரையின் புதிதாகக் கட்டப்பட்ட தாகபாவின் கட்டுமானப் பணிகளை முடிக்கவும் எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று, ஆளுநர் இதன்போது கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago