2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

‘தேர்தல் காலத்தில் சிறுபான்மையினர் புறக்கணிப்பு’

Editorial   / 2020 ஜூன் 17 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட், எப்.முபாரக் 

தேர்தல் காலத்தில், சிறுபான்மையின மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என, திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினரும், முன்னாள்   பிரதியமைச்சருமான  அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் இன்று (17)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில், “நாம் பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். 2000ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிற்பாடு, திருகோணமலை மாவட்டத்திலுள்ள மக்கள் மட்டுமல்ல, நாட்டிலுள்ள அனைத்து மக்களும்  சமூக உரிமைக்காக குரலாக ஒலிக்க வேண்டிய ஒரு சந்தர்ப்பமாக தற்போதைய தேர்தல் காணப்படுகின்றது.

“தொல்பொருளைப் பாதுகாக்க ஜனாதிபதி செயலணியை உருவாக்கியதன் மூலம், தேர்தல் காலத்தில் சிறுபான்மை மக்களைப் புறக்கணித்து, இவர்கள் செயற்படுகின்றார்கள்.

“கிழக்கில் அம்பாறையிலும் திருகோணமலையிலும் நில அபகரிப்புக்கு உட்டுள்ளோம். வடபுலத்திலும் இவ்வாறான செயற்பாடுகள் நடந்தேறியுள்ளன. இந்நிலையில், தேர்தல் காலத்தில் இவ்வாறானதொரு செயலணி அவசியமா?” எனக் கேள்வியெழுப்பிய அவர், “அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஒன்றுக்கொன்று முரணாகக் காணப்படுகின்றன” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X