Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 23 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், தெரு நாய்களுக்கு விசர்நோய்க்கான தடுப்பு மருந்தேற்றும் நடவடிக்கைகள், இன்று (23) நடைபெற்றது.
கந்தளாயில் பேராறு, அணைக்கட்டு, வான்எல, ஜயந்திபுர, சூரியபுர மற்றும் கந்தளாய் நகரம் போன்ற பகுதிகளில் காணப்படும் தெரு நாய்கள் மற்றும் வீடுகளிலும் வளர்க்கும் நாய்களுக்கும் விசர்நோய்க்கான தடுப்பு மருந்துகள், சுகாதார உத்தியோகத்தர்களால் செலுத்தப்பட்டு வருகின்றன.
கந்தளாய் பிரதேசத்தில் தெரு நாய்களால் பல சிறுவர்கள் நாய்க்கடிக்குள்ளாகியுள்ளதோடு, பொதுமக்கள் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய, இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வீடுகளில் நாய்களை வளர்ப்போர், அவற்றை கந்தளாய் பிராந்திய சுகாதார அலுவலகத்தில் கொண்டு சென்று தடுப்பு மருந்துகளை செலுத்தலாம் என கந்தளாய் வைத்திய அத்தியட்சகரால் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இந்த வேலைத்திட்டம், திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா, மூதூர், குச்சசெளி மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளிலும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
7 hours ago