Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Princiya Dixci / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன், தீஷான் அஹமட், எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மாவட்டத்தின் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
திருகோணமலை நகரை அண்மித்த உப்புவெளி, அலஸ்தோட்டம், வரோதயநகர், மட்கோ, புதுக்குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுத்துள்ளது.
இதேபோல் தம்பலகாமம், கிண்ணியா, முள்ளிப்பொத்தானை, மூதூர் கிழக்கு, வெருகல் போன்ற பகுதிகளில் உள்ள தாழ் நிலப் பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன் வீசப்பட்ட நெல் விதைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆலீம்நகர், கட்டைபறிச்சான், பாலநகர் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள பல வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள உறவினர்களது வீடுகளில் தங்கியுள்ளனர்.
அதேவேளை மூதூர் புலியடி சந்தி, அறபாநகர் சந்தி போன்ற வீதிகளில் வெள்ளநீர் குருக்கருத்துச் செல்வதால் இவ்வீதிகள் ஊடாக பிரயாணம் செய்யும் மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் பிரயாணம் செய்வதை காணக்கூடியதாகவுள்ளது. வயல் நிலங்கள் பலவற்றிலும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.
பள்ளிக்குடியிருப்பு - தோப்பூரினை இணைக்கும் பிரதான வீதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கட்டைபறிச்சான் இறால் பாலத்தால் வெள்ளம் பாய்கின்றது இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மிகுந்துபுர உயர் தொழில்நுட்ப கல்லூரியின் மதிலும் விழுந்துள்ளது.
மழை தொடருமானால் இன்னும் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் நிலவி வரும் இச் சூழலில் மக்கள் மிகப் பெரும் அசெளகரியத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
55 minute ago
2 hours ago
2 hours ago