2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

திருட்டு பொருட்களை வாங்கிய இருவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருட்டுப் பொருட்களை வாங்கிய இருவரை, இன்று (30) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான், நேற்று முன்தினம் (28) உத்தரவிட்டார்.

திருகோணமலை - மனையாவெளி பகுதியைச் சேர்ந்த 52 மற்றும் 38 வயதுடைய இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

மனையாவெளி பகுதியிலுள்ள கோவில் ஒன்றின் தர்மகர்த்தா மற்றும் கோவில் சாரதி ஒருவருமே 58,500 ரூபாய்க்கு திருட்டுப் பொருட்களை வாங்கியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் தாம்பலம் - 6, குடம் - 4, விளக்குகள் பெரிது - 2, சின்னவிளக்கு - 2, ஒலிபெருக்கி சாதனங்கள், ஒட்ட தீபம் - 2, ஆழவட்டம் - 2, விசிறி - 1, கொடி – 2 மற்றும் சாமரை - 1 போன்ற திருட்டுப் பொருட்களை வாங்கி வைத்திருந்த நிலையில் சந்தேகநபர்களை கைதுசெய்து, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த போதே, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X