2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

திருக்கோணேஸ்வரம் ஆலயத்துக்கு விரைந்த அமைச்சர்கள்

Freelancer   / 2022 ஒக்டோபர் 12 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்  

திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்துக்கான கள விஜயம் ஒன்றினை  புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா ஆகியோர் நேற்று (11) மேற்கொண்டனர்.

திருக்கோணேஸ்வரம் ஆலயத்துக்கு செல்கின்ற பாதையின் இருமருங்கிலும் அமையப் பெற்றுள்ள தற்காலிகக் கடைத்தொகுதிகள் கோணேஸ்வர ஆலயத்தைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இடையூராக உள்ளதாகவும் அதனை பொருத்தமான இடத்துக்கு அப்புறப்படுத்துமாறு ஆலயப் பரிபாலன சபை உட்பட பல்வேறு தரப்பினர்கள் கோரிக்கைகள் முன்வைத்ததனை அடுத்து அவற்றை குறித்த தரப்புகளோடு கலந்துரையாடி சாதகமான தீர்வுகளை வழங்குவதே அமைச்சர்களினது இவ்விஜயத்தின் நோக்கமாக அமையப்பெற்றது.

ஆலயப் பரிபாலன சபை மற்றும் வர்த்தக சங்கத்தினருடன் அமைச்சர் கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் குறித்த கடைத்தொகுதிகளை அப்பிரதேசத்திலிருந்து அகற்றி இன்னுமொரு இடத்தில் அமைப்பதற்கான இரண்டு இடங்களை நேரடியாகச் சென்று அமைச்சர் உட்பட அதிகாரிகள் அவதானித்தனர்.

ஆலயத்திற்கும் இயற்கைச் சுற்றாடலுக்கும் தொல்பொருள் சார்ந்த விடயங்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாதவகையில் குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்படும். எந்தவொரு தரப்புக்கும் அநீதி ஏற்படாத வகையில் இந்தச் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இதன்போது தெரிவித்தார்.

தொல்பொருள் சார்ந்த விடயங்கள் குறித்த ஒரு சமயத்துக்கு மாத்திரம் உரித்தானதல்ல என்றும்  அவற்றைப் பாதுகாப்பது அனைத்து மக்களதும் பொறுப்பாகுமென்றும் இதன்போது அமைச்சர் மேலும் எடுத்துரைத்தார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் ஒன்றான கோணேஸ்வரம் ஆலயத்தை சூழவுள்ள பிரதேசங்களில்  வெகு விரைவில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான  நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (R)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X