Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 மே 10 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று (09) மாலை வீசிய மினி சூறாவளியுடள் கூடிய மழையினால் பல்வேறு வீடுகள் பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது.
தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பட்டிமேடு, புதுக்குடியிருப்பு, குன்சப்பந் திடல் உள்ளிட்ட பல வீடுகளும் பயன்தரு மரங்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், இரு மணித்தியாலயங்களுக்கும் அதிகமான நேரம் மின் தடைப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
மின் கம்பமும் சேதமாக்கப்பட்டதன் காரணத்தால் மின் தடைப்பட்டிருந்து. இந்நிலை, மின்சார சபை மூலமாக சீர் செய்யப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியது.
தென்னை, வாழை மற்றும் பலா உள்ளிட்ட மரங்கள் முறிந்து வீட்டுக்கூரை உட்பட வீதியோரங்களிலும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த காற்றுடன் கூடிய மழையினால் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன. (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago