2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

திருகோணமலை நகரில் 41 பேருக்கு கொரோனா

Princiya Dixci   / 2021 மார்ச் 17 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத்

திருகோணமலை நகரின் என்.சி.வீதி, மத்திய வீதி, மூன்றாம் குறுக்குத்தெரு போன்ற பிரதேசங்களில் இம்மாதம் 15ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகள், இன்று (17) அதிகாலை வெளியிடப்பட்டன.

இதனடிப்படையில், 243 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக நகர பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. 

காத்தான்குடியைச் சேர்ந்த 30 பேருக்கும் திருகோணமலையைச் சேர்ந்த 11 பேருக்குமே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதேவேளை, கடந்த 15ஆம் திகதி மூடப்பட்டிருந்த கடைகள் இன்று திறக்கப்பட்டிருந்த போதும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.

மேலும், வைரஸ் தொற்று உறுதியான தொற்றாளர்கள் அனைவரையும் கொரோனா மத்திய நிலையத்துக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளை திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம் முன்னெடுத்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .