Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2021 செப்டெம்பர் 03 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன்
பொதுமக்கள் அநாவசியமாக நடமாடுவதை தவிர்த்தல் இன்றியமையாது எனத் தெரிவித்த திருகோணமலை மாவட்டச் செயலாளர் சமன் தர்சன பாண்டிகோராள, “மக்களில் பொறுப்பற்ற நடவடிக்கைகள் ஆபத்தை நோக்கிப் பயணிக்க ஏதுவாக அமையும்” என்றார்.
எனவே, தற்போதைய அபாயகர நிலையை கருத்திற்கொண்டு ஒவ்வொருவரும் செயற்படுமாறும் அவர் வேண்டிக்கொண்டார்.
திருகோணமலை மாவட்ட கொவிட் செயலணிக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில், பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமாகிய கபில நுவன் அத்துக்கோராள தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மேலும் கருத்துரைத்த மாவட்டச் செயலாளர், “மாவட்டத்தில் உள்ள கிராமியக் குழுக்களை மேலும் வலுப்படுத்தி, வைரஸ் பரவாமல் இருக்க ஆவண செய்ய வேண்டும். இக்குழுவை வலுப்படுத்துவதன் மூலம், கிராமங்களில் வைரஸ் பரவாமல் மக்களை பாதுகாக்க முடியும்.
இக்காலப் பகுதியில் மக்கள் மிக அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்படல் வேண்டும். உரிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உரிய தரப்பினரை ஒன்றினைத்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago