2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

திரு​மலையில் எண்ணெய்தாங்கி தொகுதிகளை பார்வையிட்டார்

Editorial   / 2021 ஒக்டோபர் 03 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும்  இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா (Shri Harsh Vardhan Shringla) திருகோணமலையில் உள்ள எண்ணெய்தாங்கி தொகுதிகளை இன்று (03)  பார்வையிட்டார்

இந்த எண்ணெய் தாங்கிகளின் (Lower Tank Farms) தற்போதைய அபிவிருத்திகள் மற்றும் இலங்கையின் சக்தி துறைப்பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக இந்திய – இலங்கை பங்குடைமையை மேலும் வலுவாக்குவதற்கான சாத்தியங்கள் குறித்தும் LIOC அதிகாரிகளால் அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

LIOC நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'Servo Pride ALT 15W-40'ஐ இந்த விஜயத்தின்போது அறிமுகம் செய்துவைப்பதற்காக LIOC நிறுவனத்துடன் இணைந்துகொண்டமை குறித்து வெளியுறவு செயலர் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .