Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 ஜனவரி 13 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய், ஜெயந்த மாவத்தையில் வீடு ஒன்றுக்கு முன்னால் நேற்று (12) பாரிய குழி ஏற்பட்டமையால், அச்சத்தின் காரணமாக இரு குடும்பங்கள் வீட்டை விட்டு வெளியேறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து தெரியவருவதாவது, ஜயந்த மாவத்தை, இலக்கம் 73/5 இல் அமைந்துள்ள வீட்டின் முன்பாக திடீரென பாரிய சத்தத்துடன் குழி ஒன்று ஏற்பட்டு, அதிலிருந்து தண்ணீர் வந்துள்ளது.
அது சறிது சிறிதாக பெரிதாகி சுமார் 6 அடி ஆழமும் 12 அடி அகலுமுமாக அகன்று சென்றதாக, இவ்வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
இது பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பொறியியலாளர் சமிந்தி விஜேரத்னவுடன் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் ஆகியோர் அக்குழியைப் பார்வையிட்டுள்ளனர்.
இந்தக் குழி ஏற்பட்டமைக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
1 hours ago