2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

தாய்லாந்து துறவிகளின் வருகையுடன் புத்தர் சிலை பிரதிஸ்டை

Freelancer   / 2023 மே 13 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை நகர் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் வேலியிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலப்பகுதியில் தாய்லாந்திலிருந்து பெளத்த துறவிகளது வருகையுடன் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்படவுள்ளமையை எதிர்த்து ஆர்ப்பாட்டமொன்று இன்று (13) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட பெளத்த ஆக்கிரமிப்பினை இந்த அரசானது உடன் நிறுத்த வேண்டும் என்றும், தமிழர்களது பூர்வீக நிலங்கள் தொடர்ச்சியான பெளத்த மயமாக்கப்படும் நிலைமைகள் உடனடியாக தடுக்கப்பட வேண்டும் எனும்  குறிப்பிட்டு இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் திருகோணமலை மாவட்ட அரச அதிபர் விஜயம் மேற்கொண்டு திட்டமிட்ட படி நடைபெற இருக்கும் தாய்லாந்து பெளத்த பிக்குகளது நிகழ்வில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், துறவிகள் எவரும் குறித்த தொல்பொருள் இடத்தினுள் செல்லப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டம் செய்வது எமது உரிமை அதற்கு யாரும் தடை போட வேண்டாம். இவ்வாறு பல சம்பவங்கள் நிகழ்ந்திருகின்ற போதிலும், அது தமிழர்கள் மீதான இன ஒடுக்குமுறையாகவே மாறியுள்ளதாக தெரிவித்து குறித்த இடத்தில் ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் பொது மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X