Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Janu / 2024 பெப்ரவரி 29 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வியாழக்கிழமை (29) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஏப்ரல் (05) திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கனேஷராஜா முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்வழக்கு விசாரணையின் போது இரு தரப்பிலும் சட்டத்தரணிகள் தங்களது சமர்ப்பணங்களை நீதிமன்றத்தில் முன்வைத்தனர்.
இலங்கை தமிழர் கட்சி கட்சியின் தேசிய மாநாடு கடந்த 19ஆம் திகதி நடைபெறும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் அதற்கு தடை விதிக்க கோரி திருகோணமலை சாம்பல்தீவு வட்டார கிளையின் செயலாளர் சந்திரசேகரம் பரா என்பவரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வீ.தவராசா , இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்சபை கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தலைவர் மற்றும் செயலாளர்களின் தெரிவுகளை இரத்து செய்ய உடன்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கட்சியினுடைய நலன் கருதி சில முடிவுகளை எடுக்க வேண்டி இருந்ததாகவும் சமூகத்துக்கு போடப்பட்ட வழக்கு என்ற படியாலும் கட்சிக்கு எதிராக போடப்பட்ட வழக்கு என்ற படியாலும் அவர்கள் சமர்ப்பித்த சமர்ப்பணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்பவில்லை எனவும் வழக்கை நீடித்து கொண்டு சென்றால் சமூகத்துக்கு செய்யும் துரோகம் எனவும் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்தவர்கள் எனவும் கருதி நாங்கள் இவ்விடத்தில் உடன்பாட்டிற்குள் வந்ததாகவும் சட்டத்தரணி தவராசா இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதன் போது இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்,இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளை தலைவர் சண்முகம் குகதாசன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.
அப்துல்சலாம் யாசீம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
23 minute ago
33 minute ago