2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

தங்க நகரில் அம்மன் சிலை திருட்டு

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட், தீஷான் அஹமட்

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில், அம்மன் கோவிலை உடைத்து அங்கிருந்த பழைய அம்மன் சிலையொன்று திருட்டுப் போயுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

பழமையான இந்தக் கோவிலில் இருந்து தற்போது திருடப்பட்ட அம்மன் சிலை, யுத்த காலத்தின்போது காணாமல் போய், கோவில் வளாகத்தில் புதைக்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு நடைபெற்ற வைகாசி விசாகப் பூசையின்போது கண்டெடுக்கப்பட்டது. 

இதன் பின்னர் ஆறு மாதங்களாக கோவிலுக்குள் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்த நிலையில், சிலை திருடப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 

இது தொடர்பாக சேருநுவர பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X