Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 03 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீட், எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம், அ.அச்சுதன்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பது குறித்து அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ள கடிதத்திலயே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “மரணித்தவர்களின் உடலை எரிக்காமல் அடக்கம் செய்யப்பட வேண்டுமென்பது இஸ்லாமியக் கோட்பாடாகும். எனினும், இன்றையை சூழ்நிலையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது குறித்து முஸ்லிம் சமூகம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
“இதனை மீள் பரிசீலனை செய்யுமாறு பலமுறை பலர் கோரிக்கை விடுத்தும் அது குறித்து அரசாங்கம் இதுவரை கவனத்தில் கொள்ளவில்லை. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்போரை அடக்கம் செய்ய முடியுமென உலக சுகாதார தாபனமும் பரிந்துரை செய்துள்ளது. எனினும், இலங்கையில் மட்டும் எரிக்கத்தான் வேண்டும் என்ற பிடிவாத நிலை காணப்படுகின்றது.
“எனவே, இந்தப் பிரச்சினையை ஓர் இனத்தின் பிரச்சினையாகக் கருதாமல், இலங்கையரின் பிரச்சினையாகக் கருதி, சுமூகமான தீர்வைப் பெற்றுத்தரவும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
30 minute ago
38 minute ago
53 minute ago