Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 ஏப்ரல் 12 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, ரொட்டவெவ கிராமத்தில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் கல்லெறிதல் மற்றும் பெண்கள் குளிப்பதை படம் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் மத்தியில் அண்மைக் காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்றிரவு (11) பெண்ணொருவர் தனது வீட்டுக் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது, நால்வர் கொண்ட குழு, அலைபேசியில் வீடியோ எடுப்பதைக் கண்டு, அலறியுள்ளார்.
பெண்ணின் கதறல் சத்தம் கேட்டு ஒன்றுகூறிய அயலவர்கள் அக் குழுவினரை துரத்திச் சென்றுள்ளனர்.
எனினும், அவர்கள் தப்பியோடியுள்ள போதும், அவர்களது செருப்புகள், பெண்ணின் வீட்டின் வளவுக்குள் கலட்டி வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
பெண்ணின் உறவினர்கள் மொரவெவ பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், தப்பியோடியவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கையாக செருப்புகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக பெண் முறைப்பாடு செய்துள்ளார் எனவும் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட நால்வரும் சிறுவர்கள் எனத் தாம் சந்தேகிப்பதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
4 hours ago
5 hours ago