2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

சம்பூர் அனல்மின் நிலையத்தில் இரும்புகள் திருட்டு; எழுவர் கைது

Editorial   / 2020 மே 06 , பி.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை - சம்பூர்  பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவிருந்த அனல்மின் நிலையத்தைச் சுற்றிப்  போடப்பட்டிருந்த இரும்புத் தூண்களைத் திருடிய குற்றச்சாட்டில், 07 பேரை, இன்று (06) கைதுசெய்துள்ளதாக, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை மின்சார சபை, திருகோணமலை பவர் கம்பெனி லிமிடெட் ஆகியன இணைந்து 2015ஆம் ஆண்டு சம்பூர் பகுதியில் அனல்மின் நிலையமொன்றை அமைப்பதற்கு 540 ஏக்கர் காணியை பெற்றுக்கொண்டது.

அக்காணியைச் சுற்றி ஆறு கிலோமீட்டர் இரும்புத் தூண்களால் வேலிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அத்தூண்கள் வெட்டப்பட்டு திருடப்பட்டுள்ளதாக, அதில் கடமையாற்றி வரும் பாதுகாப்பு உத்தியோகத்தர், சம்பூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டையடுத்து சம்பூர் பொலிஸ் பொறுப்பதிகாரி புத்திக ராஜபக்ச தலைமையிலான குழுவினர், தீவிர விசாரணைகளை முன்னெடுத்து, சந்தேகத்தின் பேரில் 07 பேரை கைதுசெய்துள்ளனர்.

மேற்படி எழுவரில், ஒருவர் வேறொரு குற்றச்சாட்டுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை, மூதூர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X