2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

சம்பூரில் 17 டைனமேட் குச்சிகளுடன் இருவர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 17 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத் , தீஷான் அஹமட்

திருகோணமலை - சம்பூர் கடற்படை முகாமுக்கு அருகிலுள்ள கடற்கரை பிரதேசத்தில், 17 டைனமேட் குச்சிகளை விற்பனை செய்ய முயற்சித்த இருவரை, திருகோணமலை சர்தாபுர விசேட அதிரடிப்படையினர், நேற்று (16) மாலை கைது செய்து, தம்வசம் ஒப்படைத்தாக, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பூர், முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபரும், நான்காம் வட்டாரத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபருமே, கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா பகுதிக்குக் கொண்டு செல்லும் நோக்கத்தில், தயார் நிலையில் உள்ள போதே, 17 டைனமேட் குச்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X