2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சம்பள அதிகரிப்புக் கோரி இருவேறு கவனயீர்ப்புகள்

Editorial   / 2021 நவம்பர் 03 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம்

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்புக் கோரி, திருகோணமலை மாவட்டத்தின் இருவேறு பிரதேசங்களில் கவனயீர்ப்புகள், இன்று (03) முன்னெடுக்கப்பட்டன.

கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட கந்தளாய் அக்ரபோதி தேசிய பாடசாலைக்கு முன்னால் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

எதிர்வருகின்ற வரவு - செலவுத் திட்டத்தில், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறும் ஆசிரியர்களுக்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுக்குமாறும் பெற்றோர்களால் கோசங்களும் எழுப்பட்பட்டன.

அதேவேளை, கந்தளாய் கல்வி வலயத்துக்குட்பட்ட தம்பலகாமம் கல்மிட்டியாவ சிங்கள வித்தியாலயத்துக்கு முன்பாகவும் பெற்றார்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது

அமைதியான முறையில் சுமார் 10 நிமிடங்கள் பதாகைகளை ஏந்தி கவனயீர்ப்பில் ஈடுபட்ட பெற்றோர்கள், அதன் பின் அங்கிருந்து கலைந்து சென்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .