2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கொரோனா அச்சம்; மாணவிகள் வரவில் வீழ்ச்சி

Princiya Dixci   / 2021 ஜனவரி 25 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

திருகோணமலையிலுள்ள பிரபல கல்லூரியின் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (24) உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இன்று (25) கல்லூரியின் மாணவிகள் எவரும் பாடசாலைக்கு சமூகம் தரவில்லை,  ஆசிரியர்களின் வரவு மிக, மிகக் குறைவாக காணப்பட்டது.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட டைக் வீதியில் 17 புதிய கொரோனா தொற்றாளர்கள் நேற்று (24) இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனால் திருகோணமலை நகர் பகுதியில் உள்ள தமிழ்,  முஸ்லிம் பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வரவு மிகக் குறைவாக இன்று (25) காணப்பட்டது.

இதேவேளை, திருகோணமலையில் தொடர்ச்சியாக பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .