2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

கேரள கஞ்சாவுடன் பெண் கைது

Janu   / 2024 ஜூலை 28 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, தம்பலகாமம் பிரிவுக்கு உட்பட்ட 99 ஆம் கொலனி பிரதேசத்தில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை (26)அன்று 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் போதைப் பொருள்  ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தம்பலகமம் பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஹைரியா நகர்,  புல்மோட்டை -1 என்ற இடத்தை செர்ந்த 44 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கஞ்சாவை தம் வசம் வைத்திருந்து விற்பனைக்கு முயன்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டதாக தம்பலகமம் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் , அவரை கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது  குற்றத்தை ஒப்புக்கொண்டுதன் அடிப்படையில் ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டார் எனவும் பொலிஸார்  தெரிவித்தனர்

ஏ. எம். கீத்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X