2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

குரங்கு கடித்ததில் சிறுவன் படுகாயம்

Editorial   / 2020 மே 22 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

திருகோணமலை - மட்கோ பிரதேசத்தில், குரங்கு கடித்ததில் சிறுவனொருவன் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (22)  காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்கோ, முகம்மதிய்யா நகர் பகுதியைச் சேர்ந்த கீர்த்தி சிங்க தனூஷன் என்ற 10 வயதுச் சிறுவனே, இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது வீட்டில் இருந்து அருகிலுள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்த வேளையில், பின்னால் சென்ற குரங்கு ஒன்று  காலைப் பிடித்த போது சிறுவன் கீழே விழுந்துள்ளார். 

இதனையடுத்து, சிறுவனை, குரங்கு கடித்துக் காயப்படுத்தியதுடன், தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுவனின் காலை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தவுள்ளதாக, வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

இதேவெளை, திருகோணமலை நகர்ப் பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருவதாக, அதிகாரிகளிடம் தெரியப்படுத்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X