2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

குடும்பஸ்தர்கள் இருவர் கைது

Editorial   / 2020 மே 08 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா - நடு ஊற்றுப் பகுதியில், மோட்டார் சைக்கிளில் கேரளா கஞ்சா கொண்டு வந்த குடும்பஸ்தர்கள் இருவரை, நேற்று (07) மாலை கைதுசெய்ததாக, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

ஊரடங்கு சட்டம் அமுலிலிருந்ததையும் பொருட்படுத்தாது, மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இவ்விருவரையும் வழிமறித்து சோதனையிட்ட கிண்ணியா பொலிஸார்,  மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தவரிடமிருந்து 3,350 மில்லிக்கிராம் கேரளா கஞ்சாவையும், மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தவரிடமிருந்து 3,600 மில்லிக்கிராம் கேரளா கஞாசாவையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும், கிண்ணியா - மகாமாறு, மாலிந்துறை பகுதிகளைச் சேர்ந்த 42, 39 வயது குடும்பஸ்தவர்களாவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .