2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

குச்சவெளி சபையின் பட்ஜெட் நிறைவேற்றம்

Princiya Dixci   / 2020 நவம்பர் 25 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன், எப்.முபாரக்

குச்சவெளி பிரதேச சபையின் 2021ஆம் நிதியறிக்கை (பட்ஜெட்) அறுதிப் பெரும்பான்மை வாக்குகளுடன்  நிறைவேற்றப்பட்டது.

குச்சவெளி பிரதேச சபையின்  தவிசாளர் ஏ.முபாறக்கினால் நேற்று (24) சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கைக்கு ஆதரவாக 15 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் பதிவு செய்யப்பட்டு, அறுதிப் பெரும்பான்மை வாக்குகளுடன்  நிறைவேற்றப்பட்டது.

இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட நிதியறிக்கையில், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி, சூழல் பாதுகாப்பு, திண்மக் கழிவகற்றல், சுகாதார பாதுகாப்பு, கிராம அபிவிருத்தி, மகளிர் அபிவிருத்தி, சுற்றுலாத்தலங்களின்  அபிவிருத்தி, கொரோனா வைரஸ் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள், சட்டவிரோத கட்டடங்களுக்கான நடவடிக்கை போன்ற பல்வேறு கட்டமைப்புக்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X