2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாணத்தில் இணையத்தளங்கள் மூலம் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், பொன்ஆனந்தம் 

கிழக்கு மாகாணத்தில், இவ்வருடம் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, கல்வி பொதுத்தராதர சாதாரணத்தரம், உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி, இணையத்தளத்தின் மூலம் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, கிழக்கு மாகாண பிரதி கல்விப் பணிப்பாளர் ஏ.விஜயனாந்த மூர்த்தி தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துரைத்த அவர், மாணவர்கள் தங்களது பெற்றோருக்கூடாக,  ஆசிரியர்கள், அதிபரை தொடர்புகொண்டு, விடயதானங்களை அறிந்துகொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் தொடர்பாக, பல வேலைத் திட்டங்கள், மாகாண கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன், கல்வித் திணைக்களம், வலயக் கல்வி அலுவலகங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவரை இச் சேவைகளைப் பூரணமாக பெற்றுக்கொள்ளாத மாணவர்கள், தங்களது பெற்றோரினூடாக, வகுப்பு ஆசிரியர்கள், அதிபர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்களைத் தொடர்புகொண்டு, இது தொடர்பான விவரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர்  அறிவுறுத்தினார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .