2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

‘கிழக்கில் தமிழர் வரலாறு திரிவு’

Editorial   / 2020 மே 24 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிரவன், அ.அச்சுதன்

கிழக்கில் தொல்லியல் முக்கியத்துவ மையங்களை மதிப்பீடு செய்து பாதுகாக்கும் பொருட்டு, பாதுகாப்புச் செயலாளர் தலைமையில், ஜனாதிபதி செயலணிக் குழு அவசரமாக அமைக்கப்பட்டதன் நோக்கம் என்ன என, தமிழீழ விடுதலை இயக்கத்தின் நிர்வாகச் செயலாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமாகிய நித்தி மாஸ்டர் கேள்வியொழுப்பியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (22) கூடிய பௌத்த ஆலோசனைச் சபையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், சுட்டிக்காட்டினார்.

“பௌத்த பீடாதிபதிகளை மட்டும் அழைத்து, இக்கூட்டத்தை ஜனாதிபதி நடத்தியதன் மூலம் கிழக்கில் குறிப்பாக திருகோணமலையில் பல ஏக்கர் தமிழ் மக்களின் காணிகள் பறிபோவதற்கு இது கட்டியம் கூறுவதாகவே தெரிகிறது.

“கிழக்குத் தமிழ் மக்களிடம் இருந்து இதற்கு எதிர்ப்புகள் தோன்ற முற்பட்டாலும் கொரோனா சமூக இடைவெளியைக் காரணம் காட்டி, அவ் எதிர்ப்புக்களை முறியடிக்கலாம் என நம்புகின்றனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

“வடக்கு, கிழக்கில் புராதன சின்னங்கள் எனும் பெயரிலும், தொல்பொருள் ஆராய்ச்சி எனும் பெயரிலும் தமிழ் மக்களின் காணிகளும், கோவில்களும் காலங்காலமாக மாறி மாறி பதவிக்கு வரும் அரசாங்கங்களால் அபகரிக்கப்படுகிறன.

“ஒரு இரவிலேயே புதிது புதிதாக தொல்பொருள் சான்றுகள் எனும் பெயரில் சில தடயங்கள் புதைக்கப்பட்டு, எடுக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடந்தேறி வருகின்றன.

“எனவே, தமிழ்த் தேசியத்தைத் தாங்கி நிற்கும் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒற்றுமையாகச் செயற்படுவதன் மூலம், கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு ஏற்படப் போகும் அபாய நிலைமையை தடுக்க முடியும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X