2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கிண்ணியாவில் மேலும் ஐவருக்கு கொரோனா

Editorial   / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா சுகாதார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக  இனங்காணப்பட்டுள்ளனர்  என கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.

இதன்படி, கிண்ணியா - மாஞ்சோலைச் சேனை கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரும் சீனக்குடா சீமெந்துத் தொழிற்சாலை ஊழியர்  ஒருவரும் தொற்றாளர்களாக  இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், பெரிய கிண்ணியா கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த, தாயொருவரும் மகளும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அவர்கள் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றும் ஒருவரது நெருங்கிய உறவினர்கள் என்பதால், குறித்த பொலிஸ் உத்தியோகத்தரும் தொற்றாளராக இனங்காணப்பட்டிருக்கிறார்.

கிண்ணியா தள வைத்தியசாலைக்கு நேற்று (26) சிகிச்சை பெற வந்த மேற்படி ஐவரின் அன்டிஜன் பரிசோதனையின் மூலம் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனாவின் இரண்டாவது அலைக்குப் பின்னர் கிண்ணியா சுகாதாரப் பிரிவில்  மொத்தமாக 134 பேர் கொவிட் - 19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டிருக்கிறார்கள் என்றும் அதில் ஒருவர் மரணமடைந்திருக்கிறார் என்றும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .