2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

கிண்ணியாவில் பெண் ஒருவர் கைது

Freelancer   / 2024 ஜூலை 13 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் நேற்று கைது (12)  செய்யப்பட்டதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கூபா நகர் கிண்ணியா 03 ஐ சேர்ந்த பெண்ணாவார். இவரிடமிருந்து 11 கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவலைப்பில் குறித்த பெண்ணை சோதனையிட்ட போது அவரிடம் இருந்து ஐஸ் போதை பொருளை மீட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். 

இதற்கு முன்னரும் குறித்த பெண் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .