2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

கிண்ணியாவில் சமையல் எரிவாயு விநியோகம்

Freelancer   / 2022 ஜூலை 15 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன்  கியாஸ் ஷாபி

கிண்ணியா பிரதேசத்துக்கான சமையல்  எரிவாயு விநியோகம் நான்கு மாதங்களுக்கு பின்னர் இன்று (15) மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

மூவாயிரத்துக்கு மேற்பட்ட  மக்கள் சமையல் எரிவாயுக்காக வெற்றுச் சிலிண்டர்களோடு 24 மணித்தியாலங்களாக காத்திருந்தனர். எனினும் 1000 பேருக்கே எரிவாயு  வழங்கப்பட்டது. ஏனையோர் காத்திருந்து ஏமாற்றமடைந்து ஆத்திரமடைந்து வீடு திரும்பினர்.  

இது குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கையில், நித்திரையின்றி, உணவின்றி 24 மணித்தியாலங்களாக இந்த மைதானத்தில் காத்துக் கிடந்து ஏமாற்றப்பட்டுவிட்டோம். இப்போது 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு இருக்கின்ற போது வெறும் ஆயிரம் சிலிண்டர்களை வழங்குவது நியாயமானதா?

மண்ணெண்ணெய்யும் இல்லை எப்படி நாங்கள் வாழ்வது?  எனவே  பிரதேச செயலகத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, எங்களுக்கு எரிவாயு சிலிண்டர்களை வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X