Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 09 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம.ஏ.பரீத்
கிண்ணியாவில் கொரோனா தடுப்புக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், கிண்ணியா பிரதேச செயலாளர் பிரதேச செயலாளரின் எம்.எச்.எம்.கனி தலைமையில், பிரதேச செயலகத்தில், நேற்று (8) நடைபெற்றது.
இதன்போது பல்வேறுத் தீர்மானங்கள் எடுக்கப்டப்டன.
பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக, குறிப்பாக கிராமப்புற பிரதேச மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் நடமாடும் சேவையை நடத்துவதுத் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது.
சதோச நிறுவனத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் பொருள்களை பெற்றுக் கொள்வதை தவிர்க்கும் முகமாக ஒரு நடைமுறையை கொண்டு வந்து அனைத்து குடும்பங்களுக்கும் பொருள்களைக் கொண்டு சேர்க்கக் கூடிய நடைமுறையை உருவாக்குதுத் தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டது.
தேங்காய் லாரிகள் ஊருக்குள் நுழையும் பொழுது உரிய பாதுகாப்பு நடவடிக்கை முறைகளை கைக்கொள்ளுதல், கட்டுப்பாட்டு விலையை பேணும் வகையில் கடுமையான நடவடிக்கை முறைகளை கைக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில், இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிண்ணியா, சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம்.அஜித், கிண்ணியா உலமா சபையின் தலைவர் தலைவர் ஏ.எம்.ஹிதாயத்துல்லாஹ், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள், இராணுவ தரப்பினர், பொலிஸார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago