2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

கிண்ணியா பாடசாலைகள் இயங்கவில்லை

Princiya Dixci   / 2022 ஜூலை 26 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ் ஷாபி

எரிபொருள் கோரி, கிண்ணியா பிரதேச  அதிபர் மற்றும் ஆசிரியர்கள், நேற்று (25) வேலை நிறுத்தப் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

இதனால், கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள 66 பாடசாலைகளும் நேற்று இயங்கவில்லை.  

இது தொடர்பாக, கிண்ணியா அதிபர்கள் சங்கத் தலைவர் எம்.எம். எம். முஸம்மில் தெரிவிக்கையில், “அதிபர் மற்றும் ஆசிரியகள் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு  பொருத்தமான உரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு, பிரதேச செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கு பலமுறை கோரிக்கை விடுத்திருந்தோம்.

“அத்துடன், கவனயீர்ப்புப் போராட்டங்களையும் நடத்தியிருந்தோம். எனினும், இது தொடர்பாக எந்தவொரு சாதகமான முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை.

“கிண்ணியா பிரதேசத்தில் அதிபர், ஆசிரியர்கள் தொடர்ந்து, எரிபொருள் நிலையங்களில் அவமானப் படுத்தப்பட்டு வருகின்றார்கள். எனவே, கல்வி அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், அதிபர், ஆசிரியர்கள் எரிபொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு பிரத்தியேக வசதிகளை செய்து தர வேண்டும்”  என்றார்.

அத்துடன்,  பாடசாலைக்கு அண்மையில் உள்ள ஆசிரியர்கள்  சுகவீன  லீவு பெற்றிருக்கிறார்கள் . இது நேற்று முன்தினம் (24) நடைபெற்ற அதிபர் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X