Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 ஜனவரி 18 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
திருகோணமலை மாவட்டம், கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகிய இரு சபைகளின் வரவு - செலவுத் திட்டங்கள் தோல்வியடைந்தமையால் புதிய தவிசாளர்கள் தெரிவுகள் இடம்பெறவுள்ளன.
இது தொடர்பில் வர்த்தமானி ஊடாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தெரிவித்தார்.
இதனால் குறித்த இரு சபைகளின் புதிய தவிசாளர் தெரிவு, நாளை மறுதினம் வியாழக்கிழமை (20) உரிய சபைகளின் மண்டபத்தில் இடம்பெறவுள்ளன.
இதன்படி, கிண்ணியா நகர சபையின் புதிய தவிசாளர் தெரிவு, காலை 9.30 மணிக்கும் கிண்ணியா பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு, காலை 11 மணிக்கும் இடம்பெறவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி இரு சபைகளின் தவிசாளர் தெரிவு, மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இடம்பெறவுள்ளன.
சபை உறுப்பினர்களுக்கு இடையில் அதிகார போட்டி நிலவி வரும் நிலையில், யார் அந்த தவிசாளர்கள் கதிரையை அலங்கரிக்கப் போகின்றனர் என எதிர்பார்ப்பு கட்சிகளுக்கிடையே பெரும் பரபரப்பை தற்போது ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
21 Apr 2025
21 Apr 2025