2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

காலாவதியான அரிசி மூடைகள் கைப்பற்று; லொறி சாரதி கைது

Editorial   / 2020 ஏப்ரல் 08 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

மூதூரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி லொறியொன்றில் "அத்தியவசிய சேவை" எனப் பொறிக்கப்பட்ட காலாவதியான அரிசி மூடைகளை எடுத்துச்சென்று லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

ரொட்டவெவ இராணுவ சோதனைச் சாவடியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, மேற்படி  லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த லொறியில் 400 கிலோகிராம் அரிசி மூடைகள் காலாவதியான திகதி பொறிக்கப்பட்ட பேக்கில் எடுத்துச் செல்வதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, மொரவெவ பிரதேசத்துக்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் டி.ஜே. இந்திக சம்பத், பொலிஸார் இணைந்து மேற்படி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர், புத்தளம், தெவன செதபுங் கனுவ, சஹீரா கதவுற, பகுதியைச் சேர்ந்த எம்.ஹூசைன் முகம்மது சர்ராஜ் (29 வயது) என பொலிஸார் தெரிவித்தனர். 

கைப்பற்றப்பட்ட அரிசியுடன் சந்தேகநபரை, பொலிஸ் பிணையில் விடுவிக்கவுள்ளதாகவும், வாகனத்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்  மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .