Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 17 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம், ஒலுமுதீன் கியாஸ், தீஷான் அஹமட்
திருகோணமலை மாவட்டத்தில், பாரம்பரியமாக விவசாயம் செய்கை இடம்பெற்று வந்த காணிகளில், வன இலாகா பகுதியினரால் எல்லைக் கற்கள் நடப்பட்டு வரும் சம்பவம் குறித்து எதிர்காலத்தில் பொருத்தமான நடவடிக்கை எடுத்தப்படுமென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துக்கோரள தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் திருகோணமலை மாவட்டக் காரியாலயத் திறப்புவிழாவும், திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் கடமைப் பொறுப்பேற்கும் நிகழ்வும், திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் இன்று (17) நடைபெற்றது.
இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், இந்தப் பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து தீர்வு காண்பதற்கு, மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், துறைசார் உயரதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், வன இலாகாவினர் பல விவசாயிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன எனவும் இதனால் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் பெரும் அசௌகரியங்களுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாகி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே, விவசாயிகளின் காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென வலியுறுத்திய அவர், சுற்றாடலைப் பாதுகாக்க வேண்டிய தேவை இருப்பதால் காடுகளையும் நாங்கள் சரிவரப் பாதுகாக்க வேண்டுமென்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago