2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

காணி மத்தியஸ்த சபைக்கு பெண் தவிசாளர்

Editorial   / 2022 பெப்ரவரி 09 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை காணி விசேட மத்தியஸ்த சபைக்கான புதிய தவிசாளராக திருமதி எழிலரசி சிவநேசன், மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு மூலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே தவிசாளராகக் கடமையாற்றிய மகாத் குசன் களாஸ், தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து, புதிய தவிசாளராக  கிண்ணியா, ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்தில் பட்டதாரி ஆசிரியையாகக் கடமையாற்றும் எழிலரசி நியமிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் முதல் பெண் தவிசாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

காணி பிணக்குத் தொடர்பாக, இல-759, ஈச்சந்தீவு-03 ,கிண்ணியா என்ற முகவரிக்கு  தங்களது பிணக்குகளை தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு, புதிய தவிசாளர் பொதுமக்களைக் கோரியுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X