Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஜூன் 01 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ.எச்
திருகோணமலை - சல்லி பகுதியில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் அண்மையில் காணாமல் போயுள்ளனர். காணாமல் போன குறித்த மீனவர்களின் வீடுகளுக்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நேற்று (31) விஜயம் செய்தார்.
கடந்த 20.5.2024 சல்லி பிரதேசத்தில் இருந்து காலை 10.மணியளவில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் மாயமாகியுள்ளனர் .
குறித்த மீனவர்கள் வட்டாரம்_ 2 சல்லி பிரதேசத்தை சேர்ந்த குட்டிராசா சசிக்குமார் வயது (45 ),முருகையா சுஜந்தன் வயது( 22) என்பவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இது வரையில் கிடைக்கவில்லை.
குறித்த விடயம் தொடர்பில் காணாமல் போன மீனவர்களுடன் சந்தித்து கலந்துரையாடியதுடன் இது தொடர்பாக தேடுதல் நடவடிக்கைக்காக மேலும் பல உரிய தரப்புக்களுடன் பேசுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago