Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 26 , பி.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேச சபைக்குட்பட்ட சிறுவர் பூங்கா கவனிப்பாரற்ற நிலையால் அடர்த்தியான பற்றைக் காடுகள் வளர்ந்து காணப்படுகின்றன.
இதனால் மாலை வேளைகளில் சிறுவர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கொவிட் தாக்கம் காரணமாக வருடக்கணக்கில் மூடப்பட்டதால் பற்றைக் காடுகள் வளர்ந்து காணப்படுவதால் அங்கு செல்ல முடியாத நிலை உருவாகியிலுள்ளது.
சேருவில பிரதேச சபையால் பராமரிக்கப்பட்டு வரும் இச் சிறுவர் பூங்கா இதுவரை திறக்கப்படாது இருப்பதால், அங்குள்ள சிறுவர்கள் ஏறி விளையாடக்கூடிய பெறுமதியான பொருள்களும் துருப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலையை அடைந்துவருகின்றன.
எனவே, அதற்கு முன்னர் பாரிய சிரமதானங்கள் மூலம் துப்புரவு செய்யப்பட்டு, அப்பகுதி சிரார்கள் விளையாடுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
சேருவில பிரதேசத்தினை அண்டிய தோப்பூர் மற்றும் வெருகல் போன்ற பகுதிகளில் சிறுவர் பூங்காக்கள் இல்லாது காணப்படுகின்றது. சேருவிலவில் சிறுவர் பூங்கா இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையிலுள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago