2025 ஏப்ரல் 14, திங்கட்கிழமை

கரையோரத்தை கையகப்படுத்தியோர் மீது நடவடிக்கை

Freelancer   / 2022 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:02 - 0     - 88

ஹஸ்பர்

கிண்ணியா பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட காக்காமுனை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நேற்றைய (26) தினம் திருகோணமலை கரையோரப் பாதுகாப்பு தினைக்களம் மற்றும் கிண்ணியா பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டனர்.

இதன் போது சட்டவிரோதமான முறையில் அனுமதி இன்றி அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்ட கரையோர மற்றும் களப்பு பகுதிகள் அடையாளம் காணப்பட்டு உரிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கரையோர பாதுகாப்பு தினைக்களத்தின் பிராந்திய பொருப்பதிகாரி கமகே தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையில் கிண்ணியா பிரதேச செயலக கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர் சனீஸ் உட்பட கிண்ணியா பொலிஸாரும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X